சென்னைக்கு அருகில், காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல்&டி (L&T) நிறுவனத்திற்குச் சொந்தமான துறைமுகம், 2012ம் ஆண்டில் இருந்து இயங்கிவருகிறது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியது.
330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தத் துறைமுகத்தை, 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக, சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும், இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த, சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்தது.
‘காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ‘கார்ப்பரேட் அரசு’ கைவிட வேண்டும்’ – திருமாவளவன்
மக்களுக்கு திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அதிக காலம் கொடுக்காததாலும், கொரோனா காலமாக இருப்பதாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது ஆபத்தில் முடிந்துவிடும் என்றும், எல்லாவற்றிருக்கும் மேலாக சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் அமைப்புகளும், மீனவ சங்கங்களும், அந்த பகுதியைச் சேர்ந்த மக்களும் வலியுறுத்தி வந்தனர். தமிழகத்தின், ஏறக்குறைய அனைத்து எதிர்கட்சிகளும், இந்த திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன.
அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்
இதையடுத்து, ஜனவரி 19 ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
The Port on Kattupalli Barrier island is illegal but Modi Govt is ensuring its construction.
The handover of our country to his crony capitalist friends continues. pic.twitter.com/AaAKkCK2EO
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2021
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”காட்டுப்பள்ளித் தீவில் துறைமுகம் கட்டுவது சட்டவிரோதமானது என்றாலும், மோடி அரசாங்கம் அந்த துறைமுக கட்டுமானத்தை நிறுவுவதில் உறுதியாக இருக்கிறது. நமது நாட்டை மோடியினுடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு கொடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது” துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, நீரியல் நிபுணரும், சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (MIDS) முன்னாள பேராசிரியருமான ஜனகராஜன், அரண்செய் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலை கீழே காணலாம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.