Aran Sei

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு – யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

Credit: The Hindu

யங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் யாசின் மாலிக்கை குற்றவாளி என்று கூறி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை யாசின் மாலிக் ஒப்புக் கொண்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாலிக்கிற்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க, அவரது நிதிநிலையை ஆராயுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

யுஏபிஏவின் பிரிவு 16 (பயங்கரவாதச் சட்டம்), 17 (பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான சதி) மற்றும் 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பில் உறுப்பினராக இருத்தல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120-பி (குற்றவியல் சதி) மற்றும் 124-ஏ (தேசத்துரோகம்) உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்க்கவில்லை என்று யாசின் மாலிக் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, பரூக் அகமது தர் என்கிற பிட்டா கராத்தே, ஷபீர் ஷா, மசரத் ஆலம், முகமது யூசுப் ஷா, அப்தாப் அகமது ஷா, அல்தாஃப் அகமது ஷா, நயீம் கான், முகமது அக்பர் கண்டே, ராஜா மெஹ்ராஜுதீன் கல்வால், பஷீர் அகமது பட், ஜாகூர் அகமது ஷா வட்டாலி, ஷபீர் அகமது ஷா, அப்துல் ரஷீத் ஷேக் மற்றும் நவல் கிஷோர் கபூர் உள்ளிட்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தது.

லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையத் சலாவுதீன் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Source: The Hindu

Subramanian Swamy யை கேள்வி கேக்கும் தைரியம் Congress க்கு இருக்கா? Haseef | Congress Protest | BJP

 

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு – யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்