காஷ்மீரில் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு காஷ்மீர் பண்டிட்கள், அவர்களின் காலனிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”பண்டிட்களின் ஒரே கோரிக்கை பாதுகாப்பு மட்டுமே. ராகுல் பட், ரஜனி பாலா, மக்கன் லால் பத்ரூ உள்ளிட்ட 16 காஷ்மீர் பண்டிட்களை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. இதற்குப் பண்டிட்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, காலனிகளுக்குள் பூட்டப்பட்டனர். இது நீதியா?.” தெரிவித்துள்ளார்.
1990களில் காஷ்மீரி பண்டிட்களுக்கு நடந்த அதே விஷயம்தான், இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. வீடுகள், அலுவலகங்கள், சாலைகளிள் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். இது மனிதநேயத்திற்கும் நாட்டிற்கும் எதிரானது, அதைத் தடுக்க யாரும் எதுவும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளால் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதற்கு பண்டிட் மத்தியில் பரவலான கோபம் உள்ளது.
15 நாட்களுக்கு முன்னர் புத்காமில் உள்ள சதூரா தாலுகா அலுவலகத்தில் ராகுல் பட் என்ற பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் கொல்லப்பட்ட நிலையில், குல்காம் மாவட்டத்தின் கோபால்போராவின் உள்ள வளாகத்தில் ஜம்முவைச் சேர்ந்த ஒரு பெண் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் இருந்து இடமாற்றம் அளிக்காவிட்டால் கூட்டமாக வெளியேற முடிவு செய்திருப்பதாக பிரதமர் தொகுப்பின் கீழ் பணி வழங்கப்பட்ட பண்டிட்கள் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் லாரி உரிமையாளர்களிடம் விலை நிர்ணயம் செய்ய வந்துள்ளோம். இன்று மாலைக்குள் அரசிடம் இருந்து சாதகமான முடிவு வரவில்லை என்றால், நாளை இங்கிருந்து குடிபெயர்வோம்” என்று அவர்களின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.
Source: Hindustan Times
இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview | BJP | Modi Speech Chennai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.