Aran Sei

காஷ்மீர்: துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மரணம்; ஒரே மாதத்தில் ஏழுபேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள கோபால்போரா பகுதியில் காஷ்மீர் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று காலை, (மே 31) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னதாக, தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில் இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

“குல்காமில் உள்ள கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கி சூட்டில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தோம். பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரமான பயங்கரவாத குற்றத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட  பகுதி காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்யும் – ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் குமாரின் மனைவி ரஜினி என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த மே மாதத்தில் மட்டும் திட்டமிடப்பட்டு நடைபெற்றுள்ள ஏழாவது கொலை இதுவாகும். முன்னதாக, மூன்று காவல்துறையினர், மூன்று பொதுமக்கள், ஒரு காஷ்மீரி பண்டிட், ஒரு கலைஞர், மதுபான கடையின் விற்பனையாளர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் யாவும் தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டவை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், புல்வாமாவின் ராஜ்போரா கிராமத்தில் ஒரே இரவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கார்கோன் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய சிறுவர்கள் – சிறார் இல்லத்தில் சித்ரவதை நடப்பதாக குற்றச்சாட்டு

ட்ராலைச்  சேர்ந்த ஷாஹித் ராதர், ஷோபியானைச் சேர்ந்த உமர் யூசுப் ஆகியோர் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரிபாலைச் சேர்ந்த ஷகீலா என்ற பெண்ணையும், லுர்காம் ட்ராலைச் சேர்ந்த அரசு ஊழியர் ஜாவித் அகமதுவையும் கொலை செய்ததாக ஷாஹித் மீது குற்றச்சாட்டு உள்ளது என்று காவல்துறை தலைமை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

Source: thehindu

Karthik Gopinath ஐ காட்டி கொடுத்ததே பாஜக தான் | Piyush Manush

காஷ்மீர்: துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மரணம்; ஒரே மாதத்தில் ஏழுபேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்