எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மாநாட்டு கட்சி நான்கு ஆட்சேபனைகள் அடங்கிய பட்டியலை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
டிசம்பர் 20 அன்று, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், ஜம்முவுக்கு 43 தொகுதிகள் (முன்னதாக 37) என்றும், காஷ்மீருக்கு 47 தொகுதிகள் (முன்னதாக 36) என்றும் எல்லை நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 21 அன்று, ஜம்முவில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட குப்கர் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பரிந்துரை குறித்து விவாதித்தனர். இப்பரிந்துரைகளை எதிர்த்து, ஜனவரி 1 அன்று, அமைதிவழிப் போராட்டம் நடத்தவுள்ளதாக கூட்டத்திற்கு பிறகு குப்கர் கூட்டணி தெரிவித்தது.
ஜனவரி 1 அன்று, குப்கர் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முகமது தாரிகாமி, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
எந்நிலையிலும் எங்களின் போராட்டம் தொடரும் என்று குப்கர் கூட்டணி அறிவித்தது.
இந்நிலையில், டிசம்பர் 31 அன்று எல்லை நிர்ணய ஆணைத்திடம் தேசிய மாநாட்டு கட்சி தனது ஆட்சேபனைகளை சமர்ப்பித்ததாக தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூடி நேற்று(ஜனவரி 2) நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்
“ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது. காரணம், அதை நடைமுறைப்படுத்தும் சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா இல்லையா என்பது உச்ச நீதிமன்றத்தால் கேள்விக்குட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், 2026ஆம் ஆண்டு எடுக்கப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை கணக்கில் கொண்டு, 2031க்கு பிறகு தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் மறுசீராய்வு செய்யப்பட உள்ளது. நீங்கள் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லை நிர்ணயம் செய்யாமலே தேர்தல்களை நடத்தினீர்கள். பின் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் ஏன் தனியாக செய்கிறீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறையானது ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்று ஆணையம் நியாயப்படுத்துகிறது. அது அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரிய சட்டமாகும். ஆந்திராவின் மறுசீரமைப்புச் சட்டத்தில், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இரு மாநிலங்களிலும், எந்த தொகுதி மறுசீரமைப்பும் செய்யாமல்தான் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன” என்று ஹஸ்னைன் மசூடி மேற்கோள் காட்டியுள்ளார்.
“தொகுதி வரையரைக்கு மக்கள் தொகையே முதல் மற்றும் முதன்மையான அளவுகோள். மக்கள்தொகை அதிகரிப்பை கவனத்தில் கொண்டு, அதிகரித்த மக்கள்தொகைக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதனால்தான் நாம் தொகுதிகளை மறுசீராய்வு செய்கிறோம். ஆனால், ஆணையத்தின் பரிந்துரையில் இக்காரணி மதிக்கப்படவில்லை” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
EWS க்கான வருமான உச்ச வரம்பு 8 லட்சமாகவே தொடரும் – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
“915 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள சம்பா மாவட்டத்தில், மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதைவிட இரண்டு மடங்கு பெரிய பகுதியான மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பாலில் பகுதியில், இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே உள்ளன. சம்பாவை விட மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்ட குல்காமில், மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே உள்ளன” என்று எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளை தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூடி விமர்சித்துள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.