கரூரில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக புகார் அளித்தது தொடர்பாக வார்டு உறுப்பினர், முன்னாள் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வாங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஊராட்சி செயலாளர் நளினியை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர்.
ஊராட்சிமன்ற தலைவராக உள்ள சுதா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர். அவர் வாங்கல் காவல் நிலையத்தில் செப்டம்பர் 23 அன்று மாலை வாங்கல் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் நான் என்னுடைய கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தி சாதி ரீதியாக பாகுபாடு செய்கிறார் 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி (அதிமுக).
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வருகிறார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி (திமுக).
ஊராட்சி செயலாளர் நளினி அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. மேலும் 100 நாள் பொறுப்பாளரான அவர் கணவர் மூர்த்தி தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு சம்பளம் தருமாறு கேட்டு வருவதாகவும், ஊராட்சி கூட்டங்கள் நடத்தும்போது கிண்டலடித்து, தொந்தரவு செய்து பணி செய்யவிடாமல் தடுத்து, ஜாதி பெயரைச் சொல்லி அழைப்பதாகவும், சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தொடர்ந்து ஊரக வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) லீலாகுமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சுதாவிடம் நேற்று முன்தினம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வாங்கல் காவல் நிலையத்திற்கு சுதாவை அழைத்த சென்று காவல் ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையில் விஜயலட்சுமி விசாரணை நடத்தினார்.
ராஜஸ்தான் – பொது இடத்தில் வைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்ததற்காக பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்
புகாரின் பேரில் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் நல்லசாமி (40), ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமி (58). நன்னியூர் ஊராட்சி செயலாளர் நளினி (38), 100 நாள் வேலை பொறுப்பாளர் மூர்த்தி (42) ஆகியோர் மீது ஆபாசமாக திட்டுதல், பெண் வன்கொடுமை, மற்றும் பட்டியலின, பட்டியல் பழங்குடியின வன்கொடுமை சட்டத்தின் கீழ் வாங்கல் காவல்துறையினர் நேற்று வழக்குப் பதிவு தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி செயலாளர் நளினியை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
Source : hindu tamil
kallakurichi Sakthi school student case | The consequence | Student Affected | Villavan Ramadoss
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.