பாஸ்டாக் முறையில் ஏராளமான குழப்பம் உள்ளது என்றும் பல சுங்கச்சாவடிகளில் ஸ்கேனர் வேலை செய்யவில்லை என கூறி இரட்டிப்பு கட்டணத்தை வாங்கி, பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்றும் கார்த்திக் சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (பிப்பிரவரி 19), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “கிரிக்கெட்டில் செஞ்சுரி அடித்ததும் பேட்டைத் தூக்கி காட்டுவர். அதேபோல் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால் பிரதமர், நிதியமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் பேட்டை தூக்கி காட்ட வேண்டியது தான். இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான முடிவுகள் தான் காரணம். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது கூட, வரியைக் கூட்டி, பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளனர்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘ராமரின் பெயரில் ஊழல்’ – தெருத் தெருவாக கொள்ளையடிப்பதாக எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு
“குழப்பமான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கால் மேலும் வீழ்ந்தது. இதனால் வரியைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர். செஸ் அல்லாத மற்ற வரிகளைப் பொறுத்தவரை மாநில அரசுகளுடன் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் செஸ் வரி முழுவதையும் மத்திய அரசே வைத்துக் கொள்ளலாம். அதனால் தான் செஸ் வரியைக் கூட்டியுள்ளனர்.” என்று கார்த்திக் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரி, மாநிலங்களுக்கு விரோதமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், “இந்திய அரசியல் சானத்திற்கே விரோதமானது. பாஸ்டாக் முறையில் ஏராளமான குழப்பம் உள்ளது. பல சுங்கச்சாவடிகளில் ஸ்கேனர் வேலை செய்யவில்லை என கூறி இரட்டிப்பு கட்டணத்தை வாங்குகின்றனர். பாஸ்டாக் முறையில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.