கர்நாடகாவின் துமகுரு கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் 2 பட்டியல் சமூக இளைஞர்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 21) ஆதிக்க சாதியினரான நந்தீஷ் கிரீஷும் அவனது நண்பர்களும் இணைந்து பட்டியல் சமூக இளைஞர்களான கிரீஷ் முதலகிரியப்பா (30) மற்றும் கிரீஷ் (32) ஆகிய இருவரையும் துமகுரு கிராமத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். வந்த இடத்தில் இந்த 2 இளைஞர்களும் தப்பி ஓடாதபடி அவர்களது கால்களைத் தென்னை ஓலைகளைக் கொண்டு எரித்து சித்திரவதை செய்துள்ளனர்.
சித்திரவதை தாங்கமுடியாமல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு இருவரது உடலையும் ஆதிக்க சாதியினர் குளத்தில் வீசியுள்ளனர். இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் சஹாபுர்வாட் தெரிவித்துள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.