பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மைதானம் அரசுக்கு சொந்தமானது என கர்நாடக அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து சுதந்திர தினத்தின்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பந்தல் வைக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.
இதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ். ஓகா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரங்களுக்கு முன்பு அங்கு நிலவிய சூழலையே தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
Source : the hindu
பறந்து போன சாவர்க்கர் | புல்புல் பறவை பாவமில்லையா? | Aransei Roast | savarkar | RSS | BJP | Bulbul
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.