Aran Sei

கர்நாடகாவில் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் – ஹிஜாப் வழக்கு காரணம் என சகோதரி புகார்

Credit : NDTV

ர்நாடகா மாநிலம் உடுப்பியில் ஹிஜாப் வழக்கில் மனுதாரரான ஹஸ்ரா ஷிஃபாவின் சைஃப் என்ற இளைஞர் வலது சாரியினரால் தாக்கப்பட்டதற்கு ஹிஜாப் வழக்கு தான் காரணம் என ஹஸ்ரா ஷிஃபா குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று (பிப். 22) இரவு 9 மணிக்கு உடுப்பி மாவட்டத்தில் மால்பேயில் உள்ள பிஸ்மில்லா ஹோட்டலில் சைஃப் தாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உடுப்பி காவல்துறையினரை டேக் செய்து ஷிஃபா பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”ஹிஜாப் எனது உரிமை என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பதால், எனது சகோதரர் தாக்கப்பட்டுள்ளார். எங்கள் உடமைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. என் உரிமையை நான் கேட்கக் கூடாதா?. அடுத்து பாதிக்கப்பட போகிறவர் யார்?. தாக்குதலில் ஈடுபட்ட சங் பரிவார் அமைப்பினர் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

உடுப்பி கல்லூரியில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தடையை எதிர்த்துக் கல்லூரி மாணவிகள்  6 பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகாவில் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் – ஹிஜாப் வழக்கு காரணம் என சகோதரி புகார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்