Aran Sei

கர்நாடகா: ஹிஜாப்பை தொடர்ந்து தொப்பி அணிய தடை கேட்கும் வலதுசாரிகள்

ஸ்லாமியர்கள் அணியும் தொப்பிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும்  இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் காவி சால்வை அணிந்து பணிக்கு வந்துள்ளனர்.

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை ஓய்ந்து வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினையை இந்துத்துவ வலது சாரிகள் உருவாக்கியுள்ளனர்.

ஹிஜாப் தொடர்பான சர்ச்சையால் கர்நாடக மாநிலத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. தலையில் தொப்பி அணிவது பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழக விதிகளை மீறும் செயல் என்று  இந்து மதத்தைச்  சேர்ந்த சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது

போக்குவரத்து கழக ஊழியர்களுக்குச் சீருடை அமலில் உள்ளது. வழக்கமாக அணிந்து வரும் தொப்பிகளை தற்போது அகற்ற கூறியதால் இஸ்லாமிய ஊழியர்கள் அகற்ற மறுத்துவிட்டனர். இதனால் இஸ்லாமிய ஊழியர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காவி சால்வை அணிந்து சில இந்து ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்.

பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் விதித்துள்ள சீருடை தொடர்பான விதிகளை நடைமுறைப்படுத்தவும் இஸ்லானிய ஊழியர்கள் தொப்பி அணிவதை தடுக்கவும் “கேசரி கார்மிகரா சங்க” என்ற பெயரில் ஒரு சங்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.

அந்தச் சங்கத்தின் கீழ் ஏறத்தாழ 1,500 ஊழியர்கள் பதிவு செய்துள்ளதாகவும், பணி நேரத்தில் இஸ்லாமிய ஊழியர்கள் தொப்பி அணிவதை தடை செய்யும் வரை காவி சால்வை அணிய முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கத்தில் மக்கள் போராட்டம்; இணைய சேவையை முடக்கிய காவல்துறை

பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் துணைத் தலைவர் எம்.ஆர்.வெங்கடேஷ்  கூறும்போது, ஊடகங்களில் பார்த்தபோதுதான் இந்தச் செய்தியை அறிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தச் செய்திக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் காவல் துறைக்கு இணையான சீருடைக் கட்டுப்பாடு  பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ளது. இத்தனை நாளாக விதிகளை பின்பற்றியதுபோல் தற்போதும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகம் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம் தற்செயலானதல்ல – குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கருத்து

“கேசரி கார்மிகர சங்கம்” குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ​​“இது ஊக்குவிக்கப்படாது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அனைத்து டிப்போக்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்குவோம். குழப்பத்திற்கு இடமளிக்காமல் நிலைமையை திறமையாக நிர்வகிப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Thenewindianexpress

Jaggi ஏதும் சிக்கிருச்சா? | Murugavel Interview | Sadhguru Jaggi Vasudev Interview

 

கர்நாடகா: ஹிஜாப்பை தொடர்ந்து தொப்பி அணிய தடை கேட்கும் வலதுசாரிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்