கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை, கோயில் அர்ச்சகர் விரட்டி அடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நிட்டூர் கிராமத்தில் உள்ள முளுகாட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றது. மாலை, தேங்காயுடன் அவர்கள் கோவிலுக்குள் சென்றனர். அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.
சேலம்: ‘நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடாதா?’ – 40 ஆண்டுகளாக போராடி உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்
வழிபாடு செய்யச் சென்ற தலித் குடும்பத்தினரை, அர்ச்சகர் கோயிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன், கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது. ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பிய போது, உங்களுக்கு எல்லாம் பூஜை செய்ய முடியாது எனக்கூறி, விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்து கோயிலில் இருந்த ஒருவர், காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது வேகமாக பரவி வருகிறது. காணொளி இணையதளங்களில் வேகமாக பரவியதையடுத்து இந்த சம்பவம் குறித்து தும்கூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை வெளியே போகச் சொன்ன அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Source : indianexpress
நம்ம ஊரு ஆட்டுக்காரனின் அமெரிக்க சாகசம் | அதிபரைச் சொரிந்து விட்டு அடி வாங்கிய கதை | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.