கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயர் கொண்ட பலகையை வைத்துள்ளனர். பின்னர் இந்த பெயர்ப்பலகை காவல்துறையினரால் அகற்றப்பட்டது.
நாதுராம் கோட்சேவின் பெயர் கொண்ட பலகைக்கு உள்ளூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இது சம்பந்தமாக கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
‘கோட்சே என் வழிகாட்டி‘ – குஜராத் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியால் சர்ச்சை
‘பதுகிரி நாதுராம் கோட்சே சாலை’ என்ற பலகையை உள்ளாட்சி அதிகாரிகள் அகற்றிவிட்டு, பெயர்ப்பலகை வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இருப்பினும் அந்த பெயர்ப்பலகையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சர் சுனில் குமாரின் தொகுதியில் உள்ள போலோ கிராம பஞ்சாயத்தில் சாலையோரத்தில் இந்த பலகை நிறுவப்பட்டது.
இந்த பெயர்ப்பலகை அரசாலோ அல்லது ஊராட்சி அதிகாரிகளாலோ நிறுவப்படவில்லை என்று கூறிய அமைச்சர் சுனில் குமார் சில விஷமிகள் இந்த செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Source : india today
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.