கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள பெரியபட்னா தாலுக்காவில் உள்ள மெல்லஹள்ளி என்ற இடத்தில் 17 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சாதி ஆணவக் கொலை என்று அறியப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனை காதலித்து வந்துள்ளார். இந்த உறவுக்குச் சிறுமியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த ஜூன் 7ஆம் தேதி 50 வயது மதிக்கத் தக்க சிறுமியின் தந்தை பெரியபட்ணா காவல்நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து சிறுமியின் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பெற்றோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிறுமி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மைசூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா: காந்தியை கொன்ற கோட்சே பெயரில் சாலை பலகை வைத்த மர்மநபர்கள் – வழக்குப் பதிந்த காவல்துறை
“காதலித்த பையனுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் அச்சிறுமிக்கு உறுதியளித்துள்ளனர். வாக்குறுதியை நம்பிய சிறுமி பெற்றோருடன் செல்ல ஒப்புக்கொண்டார். சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விசாரணை நடத்தப்பட்ட பிறகே சிறுமி வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். அவளைத் துன்புறுத்தமாட்டோம். அவளது கல்விக்கு உதவி செய்வோம் என்று சிறுமியின் பெற்றோரிடமிருந்து உறுதிமொழி பெறப்பட்டது” என்று மைசூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தெரிவித்துள்ளது.
Source: The Hindu
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.