Aran Sei

கர்நாடகா: காவிமயமாகும் பாடப்புத்தகங்களை திரும்பப் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும் – மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உறுதி

காவிமயமான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை திரும்பப் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

விதான் சவுதான் என்ற இடத்தில் காவிமயமாகிய பாடப்புத்தகங்களை எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கர்நாடகாவில் கல்வியை பாஜக அரசு அழித்துவிட்டது. அவர்கள் பாடப்புத்தகங்களை முழுமையாக காவிமயமாக்கியுள்ளனர். திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை அவர்கள் திரும்பப் பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம் பின்வாங்க மாட்டோம்” என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: கல்வி காவிமயம் ஆவதை கண்டித்து கல்வியாளர்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டுள்ளன. 2022-23 கல்வியாண்டிற்கான 7-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், திராவிடர் இயக்கத் தலைவர் பெரியார், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சீர்திருத்தவாதி நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன தலைவரான கேசவ் பலிராம்  ஹெட்கேவரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பகத் சிங் குறித்த பாடம் நீக்கப்பட்டதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source : india today

படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஆபாச அண்டா Bayilvan Ranganathan

கர்நாடகா: காவிமயமாகும் பாடப்புத்தகங்களை திரும்பப் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும் – மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்