கர்நாடகாவில் பேருந்து நிறுத்தம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது. ஆகவே அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தின் 3 கோபுரங்களில் 2 கோபுரங்கள் இடிக்கப்பட்டுள்ளது.
அந்த பேருந்து நிறுத்தம் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ளது. அரசு நிர்வாகம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கையில் இறங்காவிட்டால், நானே நேரடியாக புல்டோசர் கொண்டு அந்த கட்டமைப்பை தகர்ப்பேன் என்று மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி பிரதாப் சிம்ஹா மிரட்டல் விடுத்திருந்தார்..
“சமூக வலைத்தளங்களில் நான் பார்த்திருக்கிறேன். பேருந்து நிறுத்தம் மசூதியை போன்று இரண்டு மாடகோபுரங்களைக் கொண்டுள்ளது. அது மசூதி தான். இன்னும் 3-4 நாட்கள் கால அவகாசம் உள்ளது என்று பொறியாளர்களிடம் கூறியுள்ளேன். இல்லையெனில், புல்டோசர் வாகனம் மூலம் அதை தகர்ப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஹிஜாப் சர்ச்சையின் போது, இவர் அம்மாநில எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவரான சித்தராமையாவை பார்த்து சித்த’ரஹீம்’மையா என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, கர்நாடகாவில் மசூதி போல உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒரு வாரக் காலத்துக்குள் அகற்ற அவகாசம் வழங்கி நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மைசூரில் உள்ள பேருந்து நிறுத்தம் சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக கட்டப்பட்ட அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
மைசூரு அரண்மனையின் வடிவமைப்பில் ஈர்க்கப்பட்டுதான் இந்த பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளதாக கிருஷ்ணராஜா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஏ.ராமதாஸ் கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பேருந்து நிறுத்ததின் 2 கோபுரங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஏ.ராமதாஸ் கூறினார்.
Source : indiatv\
பொம்பள சோக்கு கேக்குதோ… | சங்கி சாமியாரின் சல்லாப ஆசை | Aransei Roast | BJP | Modi | Ramdev
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.