கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து இந்துக் கடவுள் சிலையை தொட்டதால் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாலூர் தாலுகாவில் உள்ள ஹுல்லேரஹள்ளி கிராமத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டதாகவும், அதைக் கொண்டாட கிராம மக்கள் முடிவு செய்ததாகவும் ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த சிலையைப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தொட்டுவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த கொண்டாட்டத்தின் போது, சேத்தன் சிலையைத் தொட்டு, அதைத் தலையில் சுமக்க முயன்றார். இந்த நிலையில், அவரை அப்புறப்படுத்திய ஆதிக்கச் சாதியினர், அவரது குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பட்டியல் சமூக சிறுவனின் பெற்றோர்கள் அபராதத் தொகையை செலுத்தும் வரை கிராமத்திற்குள் செல்ல வேண்டாம் என்று கிராம தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உ.பி: கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட அவலம் – பாஜக அரசு மீது வலுக்கும் கண்டனம்
சிறுவனின் தாயாருக்கு மர்மநபர்கள் மிரட்டல் அழைப்பு விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தலித் குடும்பத்தினர் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Dmk backs Raja in Hindu Shudra Issue | Sundharavalli | A Raja Prostitute Son Remark | A Raja Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.