Aran Sei

கர்நாடகா: ‘திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்’ என பேசிய பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் – சித்தராமையா கோரிக்கை

திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்’ என பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக சட்ட சபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மண்டியாவில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்றது.

பொய் சொல்வது பாஜகவின் கலாச்சாரம்: இந்துத்துவா என்ற பெயரில் மதவாதத்தை முன்வைப்பவர்களை பார்த்தால் கோபம் வருகிறது – சித்தராமையா

இதில் கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண், “கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், திப்பு சுல்தானை ஆராதிக்கும் சித்தராமையா ஆட்சிக்கு வருவார். உங்களுக்கு திப்பு சுல்தான் வேண்டுமா? அல்லது வீரசாவர்க்கர் வேண்டுமா?. இந்த திப்பு சுல்தானை (சித்தராமையா) எங்கு அனுப்ப வேண்டும்?. அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் உரி கவுடா, நஞ்சேகவுடா என்ன செய்ய வேண்டும்?. அதனால் திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் முடிக்க (கொலை செய்ய) வேண்டும்.இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

திப்பு சுல்தான் போல் சித்தராமையா கொல்ல வேண்டும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பில்கிஸ் பானு கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பாஜக தலைவர்களின் கொடூரமான மனநிலையை காட்டுகிறது – சித்தராமையா கண்டனம்

இதுகுறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “உயா்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண், திப்பு சுல்தானை போல் என்னை கொலை செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எதற்காக மக்களை தூண்டிவிடுகிறார். அவரே துப்பாக்கி எடுத்து வரட்டும். அமைச்சர் அஸ்வத் நாரயாண், என்னை முடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதை கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. மகாத்மா காந்தியை கொன்றவரை ஆராதிக்கும் கட்சியினரிடம் இருந்து அன்பு, தோழமையை எப்படி எதிர்பார்க்க முடியும்?.

என்னை கொலை செய்யுமாறு பகிரங்கமாக அவர் பேசியுள்ளார். ஆனால் அவர் மீது இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காவல்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் அஸ்வத் நாராயணுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளனர். குஜராத் கலாச்சாரம் கர்நாடகத்திலும் புகுந்து விட்டதா?. பிரதமர் மோடி கடந்த 2002-ம் ஆண்டு மவுனமாக இருந்தது போல் இப்போதும் மவுனமாக இருப்பாரா? .

“காந்தியை கொன்றவர்கள் என்னை மட்டும் விட்டுவிடுவார்களா?” – சித்தராமையாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை விசாரிக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

கன்னடர்கள் ஒருபோதும் கர்நாடகாவை குஜராத்தை போல் ஆக விட மாட்டார்கள். அமைச்சரவையிலிருந்து அஸ்வத் நாராயணை உடனடியாக நீக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அஸ்வத் நாராயணுடன் பா.ஜனதா கூட்டு சேர்ந்து செயல்படுகிறது என்று அர்த்தம். அல்லது அவர் நிலையற்ற மனநிலை கொண்டவராக அக்கட்சி கருதும். எனக்கு எதிரான கருத்தால் கன்னடர்கள் கோபம் அடைந்துள்ளனர் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது கருத்துக்காக அஸ்வத் நாராயண் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மண்டியாவில் திப்பு சுல்தான்-சித்தராமையா ஆகியோரை ஒப்பிட்டு நான் பேசிய கருத்துகள் திடீரென வந்தவை. அதில் எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. அரசியலில் எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி பேசுவது வழக்கமானது. சித்தராமையா குறித்து நான் கூறிய கருத்துக்களை அதனுடன் தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியமானது.

ஆர்எஸ்எஸ் ஒரு உயர்சாதியினரின் சங்கம்; மோடி ஒரு சிறந்த நாடகக்காரர் – சித்தராமையா விமர்சனம்

பேச்சு வழக்கில் சித்தராமையாவை தோற்கடிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் எனது கருத்தை தங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொண்டு சித்தராமையா பேசுகிறார். சித்தராமையாவின் பேச்சு மொழி என்ன என்பது கர்நாடக மக்களுக்கு நன்கு தெரியும். திப்புவின் மனநிலை மண்டியா மக்களுக்கு இல்லை. பிரதமர் மோடியை கொலையாளி என்று சொல்வது, முதலமைச்சரின் வீடு பாழாகட்டும் என்று பேசுவது சித்தராமையாவின் கலாச்சாரமாக இருக்கலாம். இந்த முறை நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் சித்தராமையா குறித்து பேசினேன். ஒருவேளை நான் கூறிய கருத்துக்கள் அவரை புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

கர்நாடகா: ‘திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்’ என பேசிய பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் – சித்தராமையா கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்