கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்புகளுடன் ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22-ம் தேதி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அலுவலகத்திலிருந்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் பிரிவுச் செய்தி ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகளுடன் தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. அத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பணமும் இன்னொரு உறையில் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், “பண்டிகை சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்களுக்கு இனிப்புகள், உலர் பழங்கள், பரிசுப் பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பது வழக்கம். ஆனால் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணம் அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் எனக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக முதலமைச்சர் அலுவலகத்துக்கே அதனை திருப்பி அனுப்பிவிட்டேன். இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வாறு பணம் கொடுத்துப் பத்திரிகையாளர்களை வளைக்கும் முயற்சியில் பசவராஜ் பொம்மை இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா: உதவி கேட்டுவந்த பெண்ணை அறைந்த பாஜக அமைச்சர் – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
இதேபோல சில மூத்த பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்தப் பரிசை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனிடையே எதிர்க்கட்சியான காங்கிரஸ், பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக விமர்சித்துள்ளன.
இதையடுத்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பத்திரிகை ஆசிரியர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது தனக்குத் தெரியாமல் முதல்வர் அலுவலகத்திலிருந்து இந்தப் பரிசு அனுப்பப்பட்டதாக பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
Source : indianexpress
பாஜக வளர்ச்சி சேட்டுகளின் வளர்ச்சி | கோவை திருப்பூரை நாசமாக்கும் பிஜேபி | கூச்சமே இல்லையா அண்ணாமலை?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.