Aran Sei

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

ர்நாடகாவில் உள்ள ஷிவமொக்கா நகரில் மார்ச் 22 அன்று முதல் 5 நாட்கள் நடைபெறும் கோட்டே மாரிகாம்பா ஜாத்ரா திருவிழாவில் இந்துக்கள் மட்டுமே கடை போட வேண்டும் என்று விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களுக்குக் கடைகள் ஒதுக்கக் கூடாது என்று பாஜக, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, கடைகள் போடுவதற்கான ஒப்பந்தத்தை இந்துத்துவ குழுவிற்கு விழாக்குழுவினர் ஒதுக்கியுள்ளனர்.

தொழுகையை எதிர்த்த இந்துத்துவாவினர் – நடவடிக்கை எடுக்காத ஹரியானா அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவர். அனைத்து சாதி மதம் சார்ந்த மக்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வது இதன் சிறப்பம்சம் என்று கூறப்படுகிறது.

9.1 லட்சம் பணத்தை கட்டி, கடைகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருந்த சிக்கண்ணா, திருவிழாவில் இஸ்லாமியர்களுக்கும் கடைகளை ஒதுக்கியுள்ளார். அந்த சமயத்தில் தான், மார்ச் 17 அன்று திருவிழாவில் கடைகளை போடக் கூடாது என சிக்கண்ணாவிடம் சில இந்துத்துவா அமைப்பினர் தகராறு செய்துள்ளனர்.

இஸ்லாமியரை கொலை செய்த இந்துத்துவாவினர்: கர்நாடகாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் உச்சமடைகிறதா?

இதனால் மனமுடைந்த சிக்கண்ணா தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, விழாக்குழுவிடம் இருந்து தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். இதன்பிறகு தான் இந்துத்துவா குழுக்களிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் கௌப் நகரில் உள்ள ஹோசா மாரிகுடி கோயில் நிர்வாகமும் பிற மதத்தினருக்கு இடம் ஒதுக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளது. சுக்கி மாரி பூஜே என்கிற விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இந்நிகழ்வில் இந்துக்களுக்கு மட்டுமே கடைகளை ஒதுக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

இஸ்லாமியர் பகுதிக்குள் இந்துத்துவா பேரணி; இருதரப்பும் கல்வீச்சு – இஸ்லாமியர்கள் மட்டும் கைது

சிவமொக்கா நகரில் அண்மையில் கொல்லப்பட்ட இந்துத்துவ செயற்பாட்டாளர் ஹர்ஷாவை காரணம் காட்டி இஸ்லாமியர்களுக்குக் கடைகள் ஒதுக்கக் கூடாது என்று தங்களது வாதத்தை இந்துத்துவாவினர் வைத்து வருகின்றனர்.

Source : The Hindu

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்