கர்நாடகாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மீண்டும் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் அண்மையில் சிவில் உரிமைகள் அமலாக்கதுறை இயக்குநர் பதவியிலிருந்து பயிற்சி பிரிவு இயக்குநராக மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். போலி சாதி சான்று கொடுத்த விவகாரம் தொடர்பாக தான் எடுத்த சட்ட நடவடிக்கைகள் எதிரொலியாகவே இடம் மாற்றம் செய்யப்பட்டதாக ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பணிக்காலம் முடியும் முன்பே தொல்லை தரும் நோக்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளரின் நடவடிக்கைகள் வேதனை தருவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யாவின் மகள் போலி ஜாதிச் சான்றிதழ் பெற்றதற்காக விசாரணையைத் தொடங்கியதையடுத்து, சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்திலிருந்து ரவீந்திரநாத் வெளியேற்றப்பட்டார். கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளராக இருப்பவர் ரேணுகாச்சார்யா.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பல உயர் சாதிக் குடும்பங்கள் போலி எஸ்சி/எஸ்டி சாதிச் சான்றிதழ்களைப் பெற்றிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதை அவர் விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் இருந்த புகார்கள் மீது, ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் நடவடிக்கை எடுத்துவந்தார். இதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் தன் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அவர் தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ராஜினாமா கடிதம் அளிப்பது இது 4ஆவது முறையாகும்
Source: thehindu
Shawarma Ban ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது Dr Kantharaj Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.