Aran Sei

ஹிஜாப்புக்கு தடை: ‘மாணவர்களின் மதம் சார்ந்த ஆடையை அனுமதிக்க முடியாது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்

மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர  கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். கல்லூரியின் நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமையை மீறுவதாக பலர் தெரிவித்தனர்.

ஹிஜாப்புக்கு ஆதரவாக டெல்லி பல்கலை. மாணவர்கள் போராட்டம் – கர்நாடகா மாணவிகளுக்கு பெருகும் ஆதரவு

காவி துண்டு அணிந்து  ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பி இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் சிலர். தேசியக் கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காவிக்கொடியை ஏற்றினர்.

இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆதரவாக நீல துண்டு அணிந்து ’‘ஜெய்பீம்’ முழக்கம் எழுப்பப்பட்டது.  அல்லாகு அக்பர் எனும் முழக்கம் இந்திய அளவில் பேசு பொருளானது. இந்த நிகழ்வு இந்திய நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வலதுசாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது. கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

ஜெய் பீம்! அல்லாகு அக்பர்! – நாடாளுமன்றத்தில் கொதித்தெழுந்த திருமாவளவன்

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்லூரியில் மாணவர்கள் ‘ஹிஜாப்’ அணிவதற்கு மாநில அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மனுக்களை விசாரித்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படலாம், ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை எந்த மாணவரும் மதம் சார்ந்த எதையும் அணியக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். வழக்கின் விசாரணையை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உயர்நீதிமன்ற அமர்வு.

ஹிஜாப்புக்கு தடை: ‘மாணவர்களின் மதம் சார்ந்த ஆடையை அனுமதிக்க முடியாது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்