கர்நாடகாவில் உள்ள மடாதிபதி மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், 7 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகள் மடாதிபதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் அளித்தனர்.
நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை
இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி, வார்டன் ரஷ்மி, பசவநித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு சித்ரதுர்கா காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தப்பியோடியதாக கூறப்பட்ட சிவமூர்த்தி முருக சரணரு சித்ரதுர்காவில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜராகி தன் மீதான பாலியல் வழக்கு குறித்து காவல்துறையிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து தவறானது, அவசியமற்றது – சீமான்
இதையடுத்து காவல்துறையினர், அவரை கைது செய்யாமல் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் மடாதிபதி மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய 2 மாணவிகள் நேற்று சித்ரதுர்கா முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தின் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), சிவமூர்த்தி முருக சரணருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரியுள்ளது. இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Madras Hc Judgement on Kallakurichi Case – Tada Rahim | Kallakurichi Case Latest Update | TN CBCID
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.