Aran Sei

கர்நாடகா: ‘ஓட்டுக்கு ரூ.6,000 கொடுப்போம்’ என பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை

ர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க) வாக்காளர்களுக்கு ரூ.6,000 கொடுப்போம்” என பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் வாக்குறுதிகளை ‘அள்ளி வீசி’ வருகின்றனர். இந்த நிலையில், பாஜக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி, “வரும் தேர்தலில் நாங்கள் (பாஜக) வாக்காளர்களுக்கு ரூ.6,000 கொடுப்போம். எதை வேண்டுமானாலும் செய்து கர்நாடகாவில், பாஜக ஆட்சியமைக்கும்’’ என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா: பாஜக அரசு மீது 40% ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் கைது

பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிலிருந்த ரமேஷ் ஜார்கிஹோலி, 2019-ல் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியமைத்தபோது, காங்கிரஸ் கட்சியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்தார். எடியூரப்பா தலைமையிலான அரசில், நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக காணொளி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டதும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலி, பாஜகவுக்கு வாக்குச் சேகரிக்கும் பணியின்போது, அருகிலுள்ள தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி ஹெப்பல்கரை விமர்சித்துப் பேசினார். அப்போது அவர், “லட்சுமி ஹெப்பல்கர் தொகுதி வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள்கள் விநியோகம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர் வாக்காளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குக்கர், மிக்‌ஸியைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அவர் வேறு பரிசுகள் கொடுத்தாலும் அவை, 3,000 ரூபாயைத் தாண்டாது. ஆனால், நாங்கள் (பாஜக) உங்கள் ஒவ்வொருவருக்கும் (வாக்காளர்களுக்கு) 6,000 ரூபாய் கொடுப்போம்; கொடுக்கவில்லை எனில் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம்’’ என பேசியிருக்கிறார்.

கர்நாடகா: ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க பாஜக அரசு முடிவு: காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு

மேலும், அந்தப் பகுதியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், ‘‘வரும் கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெறும். பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் ஆட்சி அமைக்கும். பாஜக ஆட்சியமைக்க நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம்’’ எனப் பேசியிருந்தார்.

ரமேஷ் ஜார்கிஹோலியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்ததுடன், “ரமேஷ் ஜார்கிஹோலி கோகாக் தொகுதியில், ஒரு ஓட்டுக்கு, 500 முதல் 2,000 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது, 6,000 ரூபாய் தருவதாகப் பேசியிருக்கிறார். வரும் தேர்தலுக்கு அவர் தொகுதியில், ரூ.50 கோடி வரையில் செலவு செய்வார். தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் அவரது அண்மைய பேச்சுகள் குறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பாஜகவின் ஆட்சி நடப்பதால், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படும் மாநில தேர்தல் ஆணையம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ எனத் தெரிவித்திருக்கின்றனர். ரமேஷ் ஜார்கிஹோலி பேச்சு, பாஜக தலைவர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சை தேர்தல் ஆணையம் ஏன் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : indianexpress

Bjp new social media rule to empower PIB to remove the news | Maridas | Rangaraj Pandey

கர்நாடகா: ‘ஓட்டுக்கு ரூ.6,000 கொடுப்போம்’ என பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்