கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்கள் இரண்டாம் நிலை பியுசி தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, இன்று (ஏப்ரல் 19) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பி.சி.நாகேஷ், “அனைத்து மாணவர்களும் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஹிஜாப் அணியும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து
ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் எஸ்எஸ்எல்சி (10ம் வகுப்பு) தேர்வுகளை நடத்தி முடித்திருக்கும் கர்நாடக அரசு, அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை பியுசி தேர்வுகளை ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை நடத்த உள்ளது.
இத்தேர்வுக்கு 6,84,255 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக அம்மாநில உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Source: IANS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.