Aran Sei

கர்நாடகா: மயானத்தில் புதைக்க ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு – பட்டியல் சாதியினரின் உடல் சாலையோரம் புதைக்கப்பட்ட அவலம்

ர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் மயானத்திற்கு உடலை கொண்டு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  மூதாட்டியின் உடல் சாலையோரம் அடக்கம் செய்யப்பட்டது

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் உள்ளது பிஜ்வாரா கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டியல்  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள மயானத்தில் பட்டியல்  சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அங்கு அடக்கம் செய்ய மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பட்டியல்  சமூகத்தை சேர்ந்த ஹனுமக்கா(வயது 75) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார்.

புதுக்கோட்டையில் தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினர் – ‘அரண்செய்’ யின் கள ஆய்வு

அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் மற்றொரு பிரிவினர் ஹனுமக்காவின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி சாலையோரமாக ஹனுமக்காவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து தலித் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘கர்நாடகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டியல்  சமூகத்திற்கு தனியாக மயானம் இல்லை. இதனால் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழக்கும் போது அவர்களது உடல்களை அடக்கம் செய்ய கடும் சிரமத்தை அனுபவிக்க வேண்டி உள்ளது. துமகூரு மாவட்டத்தில் மட்டும் 200 கிராமங்களில் பட்டியல்  சமூகத்திற்கு தனியாக மயானம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

மதுரை: தீண்டத்தகாத சாதி எதி? – சி.பி.எஸ்.இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

இந்த சம்பவம் குறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி கூறும்போது, ‘சிராவில் நடந்த சம்பவம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. பிஜ்வாரா கிராமத்தில் பட்டியல்  சமூகத்தினருக்கு தனியாக மயானம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Nakkeeran Prakash brutally attacked by Kallakurichi Sakthi School Goondas | Prakash | Deva Update 26

கர்நாடகா: மயானத்தில் புதைக்க ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு – பட்டியல் சாதியினரின் உடல் சாலையோரம் புதைக்கப்பட்ட அவலம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்