Aran Sei

கர்நாடகா: ஹிஜாப் அணிந்த மாணவிகள் – தேர்வெழுத அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம்

ர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பீதர் மருத்துவ அறிவியல் கழகத்தில்(பிரிம்ஸ்), ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று(பிப்பிரவரி 10), இளங்கலை செவிலியர் தேர்வு (பிஎஸ்சி நர்சிங்) எழுத வந்த ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என்று அட்னான் இம்தியாஸ் என்ற அக்கல்லூரி மாணவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அட்னான் இம்தியாஸ் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், ஒரு தேர்வு அறையில் ஒரு தேர்வாளர் மாணவிகளை அறைக்குள் நுழைய விடாமல் தடுத்து வெளியே நிறுத்துகிறார். தேர்வறைக்குள் செல்ல வேண்டுமானால், அவர்களின் ஹிஜாபைக் கழற்றுமாறு அவர் கூறுகிறார்.

ஹிஜாப்: போராடும் மாணவிகளின் எண்கள், புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்தது எப்படி? – பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார்

இன்று (பிப்பிரவரி 11) தேர்வு எதுவும் நடைபெறவில்லை. அடுத்த தேர்வு பிப்பிரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பிப்பிரவரி 10ஆம் தேதி வெளியிடப்பட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவுகளை கல்லூரி அதிகாரிகள் பின்பற்றி வருவதாக பீதர் மருத்துவ அறிவியல் கழகத்தின் (பிரிம்ஸ்) இயக்குநர் சந்திரகாந்த் சில்லர்கி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை எந்த மாணவரும் மதம் சார்ந்த எதையும் அணியக் கூடாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்திருந்தார்.

ஹிஜாப்புக்கு தடை: ‘மாணவர்களின் மதம் சார்ந்த ஆடையை அனுமதிக்க முடியாது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரான முகமது யூசுப் ரஹீம், “கல்லூரி அதிகாரிகள் அவசரமாக செயல்படுகிறார்கள். அவர்கள் வாய்மொழி உத்தரவுகளின்படி செயல்படுகிறார்கள். அவர்கள் மாநில அரசாங்கத்தின் உத்தரவுக்காக காத்திருந்திருக்க வேண்டும். சிறுபான்மையினரின் கல்வியைத் தடுக்கும் சூழ்ச்சி இது என சந்தேகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

கர்நாடகா: ஹிஜாப் அணிந்த மாணவிகள் – தேர்வெழுத அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்