Aran Sei

கர்நாடகா: பள்ளி பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு பற்றிய பகுதி நீக்கம் – ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்ப்பு

ர்நாடகா பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்க்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கிய நிலையில், புதிய 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயண குரு பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பாடநூல் கழகம் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய அத்தியாயம் 5 இல் ராஜா ராம் மோகன் ராய் நிறுவிய பிரம்ம சமாஜம், சுவாமி தயானநாத சரஸ்வதியின் ஆரிய சமாஜம், ஆத்மராம் பாண்டுரங்கின் பிரார்த்தனா சமாஜம், ஜோதிபா புலேயின் சத்யசோதன சமாஜம், சர் சையத் அகமது கானின் அலிகார் இயக்கம், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் அன்னிபெசண்டின் தியோசாபிகல் சொசைட்டி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

தந்தை பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆனால் இதன் முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்த நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

நாராயண குருவின் ஸ்ரீ கோகர்ணநாதர் கோயிலின் பொருளாளர் பத்மராஜ் கூறுகையில், “ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிப்பதற்காகக் கடுமையாக பாடுபட்ட நாராயண குருவின் கொள்கைகள் தற்போதைய தலைமுறைக்குத் தேவையானவை. நாராயண குருவின் பணியைக் குறிப்பிடாமல் சமூக மற்றும் மத சீர்திருத்தங்களின் ஒரு அத்தியாயம் முழுமையடையாது” என்று அவர் தி இந்து பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

“பெரியார் மற்றும் நாராயண குருவின் பகுதிகளை நீக்குவதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்காக போராடியவர்களின் நோக்கங்களை மாணவர்களுக்குக் கொண்டு செல்ல கர்நாடகா அரசு மறுக்கிறது” என்று முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.லோபோ தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர், பெரியார் கருத்துக்களை மேற்கோள் காட்டி பதிவிட்ட கன்னட நடிகர் – உணர்வுகளை புண்படுத்தியதாக பிராமணர்கள் சங்கம் புகார்.

நாராயண குருவின் சீர்திருத்தங்களை புறக்கணிக்கும் கேள்விக்கே இடமில்லை. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2 பாடப்புத்தகத்தில் சமூக மற்றும் மத சீர்திருத்தங்கள் குறித்த அத்தியாயத்தில் அவரது பணி இடம்பெற்றுள்ளது” என்று பாடப்புத்தக மறு ஆய்வுக் குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா தெரிவித்துள்ளார்.

ஆனால், 7 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் அதே பாடத்தில் பெரியார் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

Source : The Hindu

காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech

கர்நாடகா: பள்ளி பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு பற்றிய பகுதி நீக்கம் – ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்