Aran Sei

கர்நாடகா: பாஜக ஆட்சியில் தலித் அமைப்பினர் மீது அடக்குமுறையும் ரவுடிகளுக்கு ராஜமரியாதையும் கிடைக்கிறது – காங்கிரஸ் விமர்சனம்

ர்நாடகாவில் நடைபெறும் பாஜக ஆட்சியில் தலித் அமைப்பினர் மீது அடக்குமுறையும் ரவுடிகளுக்கு ராஜமரியாதையும் கிடைக்கிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலை திட்டப் பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. இது தான் இரட்டை என்ஜின் அரசின் செயல்பாடா?. தலித் அமைப்புகள் உள் இட ஒதுக்கீடு கேட்டு பெங்களூருவில் போராட்டம் நடத்தின. அந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதன் மூலம் உள் இட ஒதுக்கீடு கிடையாது என்ற தகவலை இந்த அரசு வெளிப்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 150 ரவுடிகளை பாஜகவில் சேர்த்துக் கொள்ள பட்டியல் தயாராகியுள்ளது, விரைவில் ரவுடிகள் அணியை பாஜக தொடங்க போகிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஊழல், முறைகேடு செய்கிறவர்களுக்கு ராஜமரியாதை வழங்கப்படுகிறது. ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் இந்த ஆட்சியில் ராஜமரியாதை கிடைக்கிறது. ஆனால் அமைதி வழியில் போராடும் தலித் அமைப்பினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். பாஜகவின் பார்வையில் தலித் மக்கள் குற்றச் செயல்களைச் செய்கிறவர்களை போல் தெரிகிறார்கள்.

பெங்களூருவில் இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறையினர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இரவில் நடந்து சென்ற ஒரு தம்பதியிடம் காவல்துறையினர் பணம் வசூலித்து கொள்ளையர்களை போல் நடந்து கொண்டுள்ளனர். இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.பாஜக அரசின் மோசமான நிலையை அறிய இந்த ஒரே சம்பவம் போதும்.

கர்நாடகா: இஸ்லாமிய வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் எந்த வேலையும் செய்யமாட்டேன் – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

தனக்கும், இந்த துறைக்கும் சம்பந்தம் இல்லாதவர் போல் காவல்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா நடந்து கொள்கிறார். காவல் அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுத்து பணி இடமாற்றம் பெறுகிறார்கள். அதனால் அந்த காவல்துறையினர் கொள்ளையர்களை போல் நடந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

நான் சொன்னா ஓட்டே போடமாட்டங்க | இதுல ரம்மி விளையாடுவாங்களா? | Arasnei Roast | sarathkumar

கர்நாடகா: பாஜக ஆட்சியில் தலித் அமைப்பினர் மீது அடக்குமுறையும் ரவுடிகளுக்கு ராஜமரியாதையும் கிடைக்கிறது – காங்கிரஸ் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்