கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் தொப்பி அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர், கல்லூரி முதல்வர் உட்பட ஏழு பேர்மீது விசாரணை நடத்துமாறு பனஹட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள டெர்டால் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 19 வயதான நவீத் ஹசனாசப் தரதாரி என்ற இஸ்லாமிய மாணவர் தொப்பி அணிந்து வந்ததற்காக இந்தாண்டு பிப்ரவரி 18 என்று தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவருக்கு முதுகு மற்றும் கழுத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக மார்ச் 29 அன்று பனஹட்டி நீதிமன்றத்தில் நவீத் ஹசனாசப் தரதாரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், காவல் உதவி ஆய்வாளர் ராஜு பிலாகி, கல்லூரி முதல்வர் ஏ.எஸ்.பூஜார் உள்ளிட்ட 7 பேர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், நான் தொப்பி அணிந்து கொண்டு கல்லூரிக்குள் வருவதை தடுத்து என்னை அடித்தார். பின்னர் காவல்துறையினரும் என்னை அடித்து அவமானப்படுத்தினர். கல்லூரிக்குள் மாணவர்கள் தொப்பி அணிவதைத் தடுக்கும் எந்த அரசாங்க உத்தரவும் இல்லை” என்று தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
Source : The New Indian Express
தமிழ்நாட்டை குறிவைக்கும் அண்ணா ஹசாரேக்கள் I Maruthaiyan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.