Aran Sei

கர்நாடக ‘கம்யூனல் வைரஸ்’: தமிழ்நாட்டில் பரவாமல் நடவடிக்கை எடுங்கள் – தமிழக அரசுக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

ர்நாடகாவிலிருந்து பரப்பப்படும் ‘கம்யூனல் வைரஸ்’ தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான துரை.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கர்நாடக மாநிலத்தில் கல்விக்கூடங்களில் ‘கம்யூனல் வைரஸ்’ பரப்பப்பட்டு இன்று பள்ளிகள் கல்லூரிகள் யாவும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச்சட்டம், ஹிஜாப் அணியத் தடை உத்தரவு என கர்நாடக மாநிலம் சனாதன பயங்கரவாதிகளின் சோதனைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவாவாகத் தமிழ்நாட்டை மாற்றுவதற்குத்தான் பாஜகவும் உதிரிக் கும்பலும் முயற்சிக்கின்றன. தமிழ்நாடு அரசு மிகவும் விழிப்போடு இருக்கவேண்டும். ‘கம்யூனல் வைரஸ்’ இங்குப் பரவிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான துரை.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக ‘கம்யூனல் வைரஸ்’:  தமிழ்நாட்டில் பரவாமல் நடவடிக்கை எடுங்கள் – தமிழக அரசுக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்