கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி போராட்டம் நடத்திய 23 மாணவிகளை உப்பினங்கடி அரசு கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து புத்தூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரும் கல்லூரி வளர்ச்சிக் குழுவின் (சிடிசி) தலைவருமான சஞ்சீவ மாதண்டூர் கூறுகையில், “மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக கல்லூரி வளர்ச்சிக் குழு அவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது. அதனால், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததற்காக ஏழு மாணவிகளை குழு இடைநீக்கம் செய்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஒரே மாதிரியான உடையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்துள்ளது.
Source: ndtv
கடும் கோபத்தில் அரபு நாடுகள் ! பம்மும் பாஜக ! Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.