தேசிய கொடியை அவமதித்த கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசதுரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வருங்காலத்தில் தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி ஏற்றப்படும் என கர்நாடகவின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியிருந்தார். இது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் சார்பில் தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தீர்மானம்மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார். சபையில் ஒத்திவைத்த பின்னரும் சிறிது நேரத்திற்கு அமளி தொடர்ந்தது.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.