கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை நடப்பு குளிர்காலச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டு வர பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக யுகாதி பண்டிகையின்போது ‘ஹலால் இறைச்சியை புறக்கணிப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றதில் பொதுநல மனு
இதுதொடர்பாக பாஜக சட்டமேலவை உறுப்பினர் ரவிக்குமார், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் சான்றளிக்கும் உணவை தவிர வேறு எந்த அமைப்பும் சான்றளிக்கும் உணவையும் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹலால் உணவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாஜக சட்டமேலவை உறுப்பினர் ரவிக்குமார் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த மசோதாவை பாஜக சட்டமேலவை உறுப்பினர் ரவிக்குமார் தனிநபர் மசோதாவாக கொண்டு வர முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ‘”சிலர் அதிகாரப்பூர்வமற்ற சான்றிதழை முன்வைத்து இறைச்சி சந்தையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடமிருந்து சந்தையை முழுமையாக மீட்கும் வகையில் சட்ட மசோதா கொண்டுவர முடிவெடுத்துள்ளோம். அதனைநடப்புத்தொடரில் நிறைவேற்ற இருக்கிறோம்” என்றார்.
ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “பாஜக அரசு ஹலால் மசோதா கொண்டுவந்தால் நாங்கள் அதனை எதிர்ப்போம். வாக்காளர்களை மதரீதியாக பிளவுபடுத்தும் நோக்கில் இந்த மசோதாவை அரசு கொண்டு வருகிறது. அதனை பேரவையில் நிறைவேற்ற விட மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
Source : zeenews
ஆட்டய போடுறது, ஒட்டு கேக்குறது, பிட்டு படம் எடுக்கிறது I அண்ணாமலை இது தேசபக்தியா? I TN BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.