பாஜக ஆளும் கர்நாடக அரசு நிர்வாகம் லஞ்ச அரசாக மாறிவிட்டது. அங்கு பெண்கள் வேலை பெறுவதற்காக பாலியல் உதவிகளை வழங்க வேண்டியிருக்கிறது. வேலையைப் பாதுகாக்க லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆண்கள் உள்ளனர் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பாளருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு அரசு பணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, பொறியாளர் தேர்வில் ஊழல் ஆகியவை பற்றி நீதிபதி தலைமையிலான உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் கர்நாடக மின் வாரியத்தில் நடந்த 1,429 பணியிடங்களுக்கான நியமனத்தில் 600 பணியிடங்கள் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. உதவி பொறியாளர் பணிக்கு ரூ.50 லட்சம், இளநிலை பொறியாளர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் கைமாறி உள்ளது.
கர்நாடகாவில் ஆண்களுக்கு அரசு வேலை வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஒருவர் தன்னுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருந்த பெண்ணுக்கு அரசு வேலை கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானதால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனியர்களை மிகவும் வெறுக்கிறது? – ஊடகவியலாளர் மர்வான் பிஷாரா
சப் இன்ஸ்பெக்டர் பணி நியமன முறைகேட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள், இடைத்தரகர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்று . காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பாளருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒன்றிய அரசின் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
BJP Cadres throw slipper on Finance Minister PTR Car in Madurai | Manoj Interview | Annamalai vs PTR
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.