கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தின் பசவகல்யானில் உள்ள ஒரு தர்கா முன்பு பசவண்ணா கோயிலாக இருந்தது என்று விஷ்வ இந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தலையிட்டு பசவண்ணாவின் ஆதரவாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இந்த தர்கா வரலாற்று ரீதியாக ஒரு கோயில் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இந்த தர்கா பசவண்ணாவின் அனுபவ மண்டபம். இது நிஜாம் ஆட்சியின் போது அது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது பசவண்ணாவின் அனுபவ மண்டபம் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களும் அந்த இடத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக ஆந்த தர்காவில் கோயில் படிக்கட்டுகள் மற்றும் கோயில் கலசம் போன்ற அமைப்புகள் காணப்படுவதாக விஷ்வ இந்து பரிஷத்தின் பீதர் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Source : indiatoday
Narendra Modi யை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Annamalai | Manoj Kumar Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.