Aran Sei

கர்நாடகா: கல்வி நிறுவனத்தில் ஆயுதப் பயிற்சி கொடுக்கும் பஜ்ரங் தள்

ர்நாடகாவில் உள்ள மங்களூருவில் ஆயுதங்களை விநியோகித்தபின்னர், குடகு மாவட்டம் பொன்னம்பேட் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது இந்துத்துவா அமைப்பான பஜ்ரங்தள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை வெளிப்படையாக வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், பொன்னம்பேட்டையில் உள்ள சாய் சங்கர் கல்வி நிறுவனத்தில் பஜ்ரங்தாள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன, அதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் திரிசூலத்தை உயர்த்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

பஜ்ரங்தள் உறுப்பினர்களில் ஒருவர் ஃபேஸ்புக்கில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் அமைப்பின் தலைவர் ஒருவர் திரிசூலம் கொடுப்பதைக் காண முடிகிறது.

கடந்த அக்டோபரில், பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அமைப்பின் செயல்பாட்டாளர்களுக்கு கத்திகளை விநியோகித்த நிகழ்வின் புகைப்படங்களும் வைரலாகின. இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர், இது வெறும் ‘திரிசூலம்’ விநியோகிக்கும் ஒரு அடையாள நிகழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர்.

BJP Agenda-ஐ பரப்பும் தமிழக ஊடகங்கள் I VCK Vikraman Interview l Gurumurthy | Ponmudi‌ I Annamalai

கர்நாடகா: கல்வி நிறுவனத்தில் ஆயுதப் பயிற்சி கொடுக்கும் பஜ்ரங் தள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்