கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்தின் ஒரு பகுதியைக் கேட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நேரு ஓலேகர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
பாண்டப்பா லாமணி (70), குருசப்பா லாமணி (72), கங்கவ்வா கப்பர் (65), அனுமநாதப்பா (41) ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக தாவாங்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அக்ரம சக்ரம திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு கொடுக்குமாறு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிர்பந்தித்ததால் விஷம் குடித்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். .
இக்கிராமத்தில் மொத்தம் 29 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் 15 குண்டாஸ் (ஏறத்தாழ 0.35 ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. பயனாளிகள் ஒவ்வொருவரிடமும் 5 குண்டாஸ் நிலத்தைத் தன்னிடம் திருப்பித் தர வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிர்பந்தித்துள்ளார். .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் , நிலத்தைத் திருப்பி தர மறுத்துவிட்டனர். நிலத்தைக் கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை கணக்கெடுக்க விடாமல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நேரு ஓலேகர் தடுத்ததாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Source: indiatoday
ஷமூக ஆர்வலர்களுக்கு இன்னுமா பத்தல | Rajiv Gandhi Interview | Sumanth C Raman | Rangaraj Pandey
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.