கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டதற்காக ஒரு இளைஞரை பாவகடாவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடரமணப்பா அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையாகி உள்ளது.
பவகடா தொகுதிக்கு உட்பட்ட நாகேனஹள்ளியை சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி. இவர் காங்கிரஸ் எம்எல்ஏ வெங்கட ரமணப்பாவை சந்தித்து, நாகேனஹள்ளியில் சாலை, குடிநீர் வசதிகள் இல்லை. அவற்றை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று கோரியுள்ளார்.
ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
இதனால் கோபமடைந்த வெங்கட ரமணப்பா, நரசிம்ம மூர்த்தியின் கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர், எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து எம்எல்ஏ.வின்ஆதரவாளர்கள் அங்கிருந்து நரசிம்ம மூர்த்தியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதுகுறித்து எம்எல்ஏ வெங்கட ரமணப்பா கூறும்போது, “அந்த இளைஞர் மரியாதை குறைவாக பேசியதால் கோபத்தில் அவரை அடித்துவிட்டேன். இதற்காக அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, இந்தச் சம்பவத்தின் வைரலான வீடியோவை ட்வீட் செய்து, “கர்நாடகாவில், பவகடாவின் காங்கிரஸ் எம்எல்ஏ வெங்கடரமணப்பா, தனது கிராமத்தில் சாலை கேட்ட இளைஞரை அறைந்தார். சித்தராமையாவும் டிகேஸும் காங்கிரஸ் தொண்டர்களை அறைந்ததை தொடர்ந்து இந்தப் புதிய சம்பவம் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
source: hindustantimes
இந்தியாவில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறதா? உண்மை என்ன? பொறியாளர் காந்தி விளக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.