கார்கோனில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது வன்முறை வெடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை மத்திய பிரதேச அரசு இடமாற்றம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி கார்கோன் நகரில் ராம நவமி ஊர்வலத்தின்போது கல் வீச்சு நடைபெற்றது. இந்த மோதலின்போது பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 24 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவையும் விதித்தது.
ம.பி.,கார்கோன் ராமநவமி வன்முறை: 177 பேரைக் கைது செய்துள்ள காவல்துறை
மத்திய பிரதேச அரசால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, புதுதில்லியில் உள்ள மத்தியப் பிரதேச பவனில் கார்கோன் மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா சிறப்புப் பணி அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். ரத்லாம் மாவட்ட ஆட்சியர் குமார் புருஷோத்தம் கார்கோனின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்கோனில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய சித்தார்த்; மாநில தலைநகர் போபாலில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்னா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் இனி கர்கோன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: PTI
போலீசையே போலீஸ் அடிச்ச கதை தெரியுமா Tada Rahim Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.