Aran Sei

காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர்.

அதனையடுத்து டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட செய்தி அறிந்த ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.

2024இல் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜகவை பிடுங்கி எறியவேண்டும் – ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் கருத்து

மேலும் இது குறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்தனர்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

மேலும் மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் – வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

Kallakurichi Sakthi School Accused are being Protected – Advocate VCK Rajinikanth Interview | ADMK

காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்