தந்தை பெரியாரை அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட சண்டை பயிர்ச்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் சிலை குறித்து கனல் கண்ணன் அவதூறாக பேசினார்..
அவருடைய உரை சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன், சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் பெரியார் குறித்து கனல் கண்ணன் அவதூறாக பேசியது குறித்து புகார் அளித்தார்.
காவல்துறை தேடுவதை அறிந்து தலைமறைவான கனல் கண்ணன் புதுச்சேரியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் புதுச்சேரி சென்று அவரை செய்துள்ளனர். சென்னைக்கு அவரை காவல் துறையினர் அழைத்து வருகின்றனர்.
Its a preplanned attack on PTR – Pasumpon Pandian | Bjp Slipper on PTR | PTR vs Annamalai | Madurai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.