Aran Sei

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து தவறானது, அவசியமற்றது – சீமான்

ள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து, அநீதிக்கு எதிராக நீதியைக் கேட்டு தர்மத்தைக் காக்க அதர்மத்தை எதிர்த்து போராடுகிற யாருக்குமே மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் தரக்கூடிய ஒன்றாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. ஒரு வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்துவரும்போது, நீதிமன்றம் அவசர அவசரமாக கருத்து கூறியிருப்பது, அவசியமற்றது இது எங்கேயும் நிகழாது.

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

அதன்பின்னர் நீதிபதிகள் அங்கு கள ஆய்வுக்கு செல்கின்றனர். நீதிபதிகள் கள ஆய்வுக்கு செல்லும்போது நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவிப்பது எவ்வளவு அவசியமற்றது, அது எவ்வளவு தவறான முன்னுதாரணமாக போகும் என்பதை கவனிக்க வேண்டும்.

நீதிபதிகள் விசாரணை, நடந்துகொண்டிருக்கும் சிபிசிஐடி விசாரணையின் முடிவுகள் இந்தக் கருத்தை ஒட்டித்தான் வரும். முதலில் கருத்தை அறிவித்துவிட்டு விசாரணை என்பது, எவ்வளவு வேடிக்கையானது. அது இதுவரை எங்குமே நிகழாதது.

ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

உச்ச நீதிமன்றமே என்றாலும்கூட பிணை கோரினால், பிணை கொடுக்க வேண்டுமே தவிர அதற்காக தீர்ப்பையே கொடுப்பது எப்படி சரியாக இருக்கும். அது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றமே அதை வலியுறுத்தியிருக்கிறது. பிணை கேட்டால் பிணை கொடுக்க வேண்டும், வழக்கின் சாராம்சத்தையொட்டி தீர்ப்பையே வெளியிடுவது எப்படி சரியாக இருக்கும்.

எனவே, இது மிகப்பெரிய தவறு. மிகப் பெரிய தவறான முன்னுதாரணம். கடைசி நம்பிக்கையாக நமக்கு இருப்பது நீதிதான். கடவுளின் அவதாரங்களாக நீதிபதிகளை மக்கள் பார்க்கின்றனர். அவர்கள் இதுபோன்ற முடிவெடுப்பது என்பது மிகுந்த மனச்சோர்வை தருகிறது. அநீதிக்கு எதிராக நீதியைக் கேட்டு தர்மத்தைக் காக்க அதர்மத்தை எதிர்த்து போராடுகிற யாருக்குமே மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் தரக்கூடிய ஒன்றாகத்தான் இதை நான் பார்க்கிறேன்” என்று தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Madras Hc demands for ban on YouTube channels – Kallakurichi Case Latest update | Haseef | Deva

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து தவறானது, அவசியமற்றது – சீமான்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்