Aran Sei

கள்ளக்குறிச்சி: தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க தலித் ஊராட்சி மன்ற தலைவர் கடிதம் – நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி., உறுதி

ந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி தேசியக் கொடியை ஏற்ற, தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீண்டாமை காரணமாக தன்னை தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்று ஆதிக்கச் சாதியினர்  தடுப்பதாக ஊராட்சி மன்றத் தலைவராக சுதா வரதராஜி புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், “நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர். எங்கள் கிராமத்தில் எனக்கு முன்னாள் 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவின்போது கொடியேற்றி வைத்து உள்ளனர்.

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

என்னை பட்டியலினப் பெண் தலைவர் என்பதால் சென்ற குடியரசுத் தின விழாவின்போது கொடியேற்றக் கூடாது என்று அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த அ.அருண்குமார் மற்றும் துணைத் தலைவர் த.கண்ணன் ஆகியோர் தடுத்துவிட்டனர். இந்த 75 வது சுதந்திர தினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வாய்ப்பளித்து தக்க பாதுகாப்பு வழங்கிய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஊராட்சித் தலைவர் கடிதம்

75-வது சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைக்க காவல் துறையினருக்கு உதவுமாறும், “ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவது யாரேனும் கண்டறிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு கூறியதாவது, “500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கள ஆய்வு நடத்தியதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை. இப்பிரச்னை தொடர்பாக, ஓரிரு நாட்களில், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதியை வலியுறுத்திய அவர், ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பஞ்சாயத்துத் தலைவர்களின் உரிமைகளை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும் சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகளைப் பயன்படுத்த வேண்டும்” என்று பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த  ஹென்றி டிபாங்கே கூறியுள்ளார்.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

2020ல் திருவள்ளூரில் உள்ள ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்தில் இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது. குடியரசு தினத்தன்றும் சுதந்திர தினத்தன்றும்தேசியக் கொடியை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் அம்ருதத்துக்கு வாய்ப்பளிக்காமல் ஊராட்சி செயலர் உள்ளிட்ட இடைநிலை சாதிகள் மறுத்தனர். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்ட பின் பிரச்சனை பெரிதாகி அவர் கொடி ஏற்ற அனுமதிக்கப்பட்டார்.

Source: Time Of India

500 கோடி கருப்பு பணம் | அலறி ஓடிய ரஜினிகாந்த் | Sangathamizhan | Rajinikanth | BJP | RN Ravi | Modi

கள்ளக்குறிச்சி: தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க தலித் ஊராட்சி மன்ற தலைவர் கடிதம் – நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி., உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்