சக்தி மேல்நிலைப்பள்ளி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளரை சிலர் தாக்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே, கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, ஜூலை, 17ல், மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் ஏற்பட்டது.
65 நாளுக்கு பின் பள்ளி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை, 5:30 மணியளவில், ‘நக்கீரன்’ நிருபர் பிரகாஷ், 56, போட்டோ கிராபர் அஜீத்குமார், 24, ஆகியோர், பள்ளியில் மேற்கொள்ளும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து செய்தி சேகரித்துள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடாக இருக்கும் ZOOM செயலி – என்ன சொல்கிறது ஒன்றிய அரசு?
பின், காரில் சென்றபோது, சிலர் வழிமறித்து காரை உடைத்து, தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தப்பித்து, சின்னசேலத்தில் இருந்து, சேலம் மாவட்டம், தலைவாசல் வந்தனர். அப்போது, காரை துரத்தி வந்த பத்துக்கும் மேற்பட்டோர், நிருபர், போட்டோ கிராபர் மீது தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த பொதுமக்கள், நிருபரை மீட்டு, தலைவாசல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தாக்குதலில் பல் உடைந்த போட்டோ கிராபர் அஜீத்குமார், காயமடைந்த நிருபர் பிரகாஷ் ஆகியோர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த ஆத்துார் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். நிருபர் பிரகாஷ் அளித்த புகாரில், பள்ளி நிர்வாகி ரவிக்குமாரின் தம்பி அருள்சுபாஷ், மோகன், ராஜசேகர் உள்பட 10 பேர் மீது, தலைவாசல் காவல்துறையினர், கொலை முயற்சி உள்பட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மியான்மருக்கு கடத்தப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் – முத்தரசன் வலியுறுத்தல்
நிருபரை தாக்கிய வழக்கில், சின்னசேலத்தை சேர்ந்த, செல்வராஜ், 35, தீபன்சக்கரவர்த்தி, 36, செல்வக்குமார், 38, பாலகிருஷ்ணன், 45, ராஜசேகர், 44, ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kallakurichi -இல் தாக்கப்பட்ட Nakkeeran Prakash | பதறவைக்கும் வீடியோ | பின்னணியில் யார்?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.