Aran Sei

கள்ளக்குறிச்சி: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த 11 ஆம் வகுப்பு மாணவிகளை தேர்வு எழுத விடாமல் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. இதில் 6 இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்துள்ளனர். தேர்வு மைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளார்.

சென்னையின் ஒரு தனியார்ப் பள்ளியில் தனது மகனை சேர்க்க சென்ற ஹிஜாப் அணிந்த தாய்: அனுமதி மறுத்த பள்ளி நிர்வாகம்

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்றும், அதை அகற்றி விட்டுச் சீருடையில் வந்து தேர்வு எழுதும்படியும் அவர் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 6 இஸ்லாமிய மாணவிகளும், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாப்பை அகற்றி விட்டு, சீருடையில் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அம்மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது. அத்தகைய இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழ்நாட்டில் சிறுபான்மையாக உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையுடன் செயல்பட்டு, மதவெறியைத் தூண்ட முயற்சிப்பதைத்தான் உளுந்தூர்பேட்டை நிகழ்வு நமக்குக் காட்டுகின்றது.

தமிழ்நாடு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் உள்ளிட்ட மத உடைகளை அணியத் தடை விதியுங்கள் – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவிலேயே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழ்நாட்டு மண்ணில், மதவெறியைத் தூண்ட முயற்சிப்போரை, முளையிலேயே இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும். உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது, கல்வித் துறை விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுக்க அரசு Beef Biriyani திருவிழா நடத்தணும் | Sundharavalli

கள்ளக்குறிச்சி: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்