மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தி ஆசிரியர் டபிள்யூ. ஷியாம்ஜெய், தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) துன்புறுத்தப்பட்டதாகக் கூறி பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து மணிப்பூர் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (ஏ.எம்.டபிள்யூ.ஜே.யு), எடிட்டர்ஸ் கில்ட் மணிப்பூர் (ஈ.ஜி.எம்) மற்றும் மணிப்பூர் ஹில் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (எம்.எச்.ஜே.யூ) உறுப்பினர்கள் நேற்று (ஆகஸ்ட் 4) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கெய்சம்பட் பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாலை நாளிதழான கங்கிலிபாக்கி மீராவின் தலைமை செய்தி ஆசிரியரான ஷியாம்ஜெய், தலைமறைவாக உள்ள குழுக்களுக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு பத்திரிகையாளர்களுடனான தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.: பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
”ஏஎம்டபிள்யூஜேயுவின் தலைவரான ஷியாம்ஜெய், நண்பகல் வரை ஒரு சிறிய அறையில் தனியாக உட்கார வைக்கப்பட்டுள்ளார். பின்னர், விசாரணைக்குத் தொடர்பில்லாத கேள்விகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
”மாலை 5 மணிவரை நீடித்த விசாரணையில், அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாக ஷியாம்ஜெய் கூறியுள்ளார்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்ஐஏவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் இல. கணேசன் மற்றும் மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங்கிடம் செய்தியாளர்கள் மனு அளித்துள்ளனர்.
பத்திரிகையாளர்கள் இனியும் துன்புறத்தப்படாமல் இருப்பதை பார்த்துக் கொள்ளுமாறு ஆளுநர் மற்றும் முதலமைச்சரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Source: The New Indian Express
Kallakurichi Sakthi School | சங்கிகளை காப்பாற்றும் காவல்துறை | Advocate Raju Interview | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.