இன்று (ஏப்ரல் 27), சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப்பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் வெளியேற்றப்பட்டனர்.
இவ்விபத்திற்கான காரணமென்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ளே சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீட்புப் படையினருக்கு உதவும் வகையில், மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சமூக அக்கறையுடன் செயல்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.@CMOTamilnadu pic.twitter.com/gxKt1YjQIz
— CMPC (@CMPChange) April 27, 2022
இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க சம்பவ இடத்திற்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீட்புப் படையினருக்கு உதவும் வகையில், மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர்கள், ரிப்போர்ட்டர்கள் என அங்கிருந்த பத்திரிகையாளர்கள் துரிதமாக செயற்பட்டுள்ளனர்.
இதற்கு, மூத்த பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அரசாணைக்கு பிறகும் தனியார் கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம்? | போராட்டத்தில் மாணவர்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.