Aran Sei

அஞ்சல் துறையில் பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் – நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்

ந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்கள் மற்றும் தபால் பிரிக்கும் உதவியாளர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை பிப். 10 தேதி இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 946 பேரில் 900 பேர் வட மாநிலத்தவர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் தபால் பிரிக்க போகும் 946 பேரில் 900 பேர்களின் பெயர் மிஸ்ரா, ஜோஷி, பண்டிட், அகர்வால், சிங், லங்கா, அவஸ்தி என உள்ளது. ஒரு சில பெயர்கள் மற்றுமே முனியசாமி, கணேச பாண்டி, ராஜாராம் என உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்ககளுக்கு பிணை மறுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

”946 பேர்கொண்ட பட்டியலில் முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள் பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது. ஆனால், ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி ஒதுக்கீடு பிரிவுகள் தனியே தரப்பட வேண்டாமா?. சமூக நீதி உறுதி செய்யப்படுகிறதா? என்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ”அஞ்சல் நிர்வாகமே! மாநில அளவில் தேர்வுகளை நடத்து, தமிழ் அறிவை உறுதி செய். தமிழர் வேலையை  பறிக்காதே.”என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறையில் பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் – நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்