Aran Sei

ஜேஎன்யுவை அழித்தவரை யுஜிசி தலைவராக்குவதா? – மாணவர்கள், பேராசிரியர்கள் எதிர்ப்பு

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதேஷ் குமாரை பல்கலைக்கழக மாணியக் குழுவின்(யுஜிசி) தலைவராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நியமனம் குறித்து ஜேஎன்யு ஆசிரியர் சங்கத்தின் (ஜேஎன்யுடிஏ) செயலாளர் மௌசுமி பாசு, இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

“யுஜிசி தலைவராக நியமிக்க தகுதியான கல்வியாளர் வேறு யாரும் இல்லையா? அத்திறமையும் தகுதியும் உடையவர்களுக்கு பஞ்சமா? பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உருவாக்குவதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக ஆசிரியர்கள்தான் தங்கள் சொந்த பணத்தை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

`இது கல்வியைப் பார்ப்பன மயமாக்கும் முயற்சி’ – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் (ஜேஎன்யுஎஸ்யு) தலைவர் ஐஷி கோஷ் பாசு, “கடந்த ஆறு ஆண்டுகளாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை அழிப்பதற்கான வேலைகளைச் செய்து வந்ததற்கு, ஜெகதேஷ் குமார் யுஜிசியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனங்களை அழிப்பதுதான் ஜெகதேஷ் குமாரின் நிபுணத்துவம். இதன் காரணமாகதான் பாஜக அரசு அவரைத் தேர்ந்தெடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் சாகேத் மூன், “அரசின் கொள்கைகளை எதேச்சதிகார வழியில் செயல்படுத்தியதற்காக ஜெகதேஷ் குமாருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் விரும்பங்களை செயல்படுத்துபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதைப் போல இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜேஎன்யுவை நாசம் செய்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்ற கனவு எவ்வாறு மெய்பட்டது? – கியான் ப்ரகாஷ்

தான் பல்கலைக்கழக மாணியக் குழுவின்(யுஜிசி) தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெகதேஷ் குமார், “தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில்தான் என் முதல் கவனம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Source: PTI

ஜேஎன்யுவை அழித்தவரை யுஜிசி தலைவராக்குவதா? – மாணவர்கள், பேராசிரியர்கள் எதிர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்